ARUNKUMAR
என் கிறுக்கல்கள்
Sunday, 13 December 2015
வெட்கம்
உன் அழகைக் காண வெட்கி
நொடியில் ஓடி ஒளிந்தது
மின்னல் !!!
Saturday, 7 November 2015
பஞ்ச பூதங்கள்
சுட்டெரிக்கும் வெயில்
உன் கோபம் !
ஆர்ப்பரிக்கும் மழை
உன் சிரிப்பு !
அமைதி காக்கும் பூமி
உன் பொறுமை !
சுழன்றடிக்கும் காற்று
உன் திறன் !
பரந்த வானம்
உன் குணம் !
பஞ்ச பூதங்கள் உனைக்
கண்முன் நிறுத்தும்
ஒவ்வொரு கணமும் !!!
Thursday, 1 October 2015
நெற்றி
சுருக்கங்களுடன் அழகாய்
ஒரு மூன்றாம் பிறை
அவள் நெற்றி !!!
Tuesday, 1 September 2015
அழகு
என் முகம் இத்தனை அழகா
என வியந்தேன் !
உன் கருவிழியில் காணும்பொழுது !!!
Friday, 21 August 2015
விடியல்
விடியலின் வெளிச்சம் போதவில்லை
காத்திருக்கிறேன்
நீ கண் விழிப்பதற்காக !!!
Friday, 7 August 2015
ஊடல்
மேகத்துடன் கோபம்
மண்ணைச் சேர்ந்தன
மழைத்துளிகள் !!!
.
.
.
.
உனைப் பிரிந்து மண்ணில் வாழ மனமில்லை
மீண்டும் வருகிறேன்
நீராவியாய் !!!
Monday, 27 July 2015
பிச்சை
கையில் சில்லறை இருந்தும்
பிச்சையிட மனமில்லை
பேருந்தில் நடத்துனர்
கேட்பார் என்பதால் !!!
Thursday, 16 July 2015
துரோகம்
மனிதனின் வாழ்வை மற்றும் சக்தி
காதலுக்கு மட்டும் இல்லை
துரோகத்திற்கும் உண்டு...
துரோகம்
மனிதனின் வாழ்வை
முடக்கிப் போடும் அல்லது
மாற்றிப் போடும் !
நம்பிக்கை
நீ மிக அதிகமாக நம்பும் மனிதர்களின் மறுபக்கம்
மிக மோசமானதாக இருக்கும்...
Thursday, 9 July 2015
நிலவு
என் காலெண்டரில் உள்ள பௌர்ணமிகளை அழிக்கிறேன்
என் வானில் என்றும் ஒரே நிலவு
அவள்!!!
Monday, 6 July 2015
உவமை
மீன் தொட்டியில்
நீரின்றி நீந்தும் மீன்கள்
உன் கண்கள்!!!
Friday, 26 June 2015
வெளிச்சம்
வானில் நிலவில்லை
இருப்பினும் ஒளிர்கிறது என் இரவு
அருகில் நீ!!!
Newer Posts
Home
Subscribe to:
Comments (Atom)