ARUNKUMAR
என் கிறுக்கல்கள்
Friday, 31 August 2018
இருள்
இருளும் அழகு தான்
உனைப் பிரிந்து வாழும் தனிமையை விட!
இசையும் இரைச்சல் தான்
உன் குரல் கேட்காமல் வாழ்வதை விட!!!
Thursday, 5 October 2017
புலன்கள்
தென்றலை நான் உணர்ந்தது இல்லை
உன் சுவாசக் காற்று தொடும் வரை!
மலர்களை நான் ரசித்தது இல்லை
உன் கூந்தல் சூடும் வரை!
இசையில் நான் மயங்கியதில்லை
உன் கொலுசொலியில் மூழ்கும் வரை!
வார்த்தைகளின் பயன் தெரிந்தது இல்லை
உன் பேச்சின் சுவை அறியும் வரை!
உடல் மொழியினை புரிந்தது இல்லை
உன் நாணம் எனை ஆளும் வரை!!!
Tuesday, 22 August 2017
சந்திர கிரகணம்
புவியும் உன்னழகில் பொறாமை
கொண்டதினால் நிகழ்கிறதோ இந்த
கிரகணம் !!!
Friday, 4 August 2017
அவா
உன்னை விட உன் நிழலையே அதிகம் விரும்புகிறேன்
அது என்னை வெறுப்பது இல்லை
உன்னை விட உன் புகைப்படத்தையே அதிகம் ரசிக்கிறேன்
அதில் உன் புன்னகை மறைவதில்லை
உன்னை நேரில் காண்பதை விட கனவில் காணவே விழைகிறேன்
அதில் நீ என் கை பிரிவதில்லை
கற்பனையில் எவ்வளவு ரசிப்பினும் வாழ்வை
உன்னுடன் சேர்ந்து வாழவே தவம் புரிகிறேன்!!!
Saturday, 18 June 2016
வெப்பம்
வெண்ணிலவின் வெப்பத்தை உணர்கிறேன்!
நீ அருகில் இல்லாத பொழுது !!
Thursday, 26 May 2016
முகப்பரு
அவள் அழகு முகத்தில்
அலங்காரப் புள்ளிகள் !
முகப்பரு !!
Sunday, 13 December 2015
வெட்கம்
உன் அழகைக் காண வெட்கி
நொடியில் ஓடி ஒளிந்தது
மின்னல் !!!
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)